"Everything has its beauty
But not everyone sees it"- Confucius
டீன் எஜில் ஒரு அழகான பெண்ணை பார்த்துவிட்டு பக்கத்தில் இருந்த நண்பனிடம் காட்டியபோது - "சே, என்ன மோசமான ரசனை உனக்கு" என்று சொன்னான். இன்னொரு சமயம் அதே நண்பன் காட்டிய 'அழகான' பெண் அவ்வளவாக என்னை கவரவில்லை. எனது ரசனை மற்றும் அழகுணர்ச்சியை alter செய்துகொள்ள வேண்டுமோ என்று சிந்தித்திருக்கிறேன். எது அழகானது என்று என்னால் சரியாக கண்டுபிடிக்க முடியவில்லை என்ற கருத்துடனே பல காலம் கழிந்தது.
சினிமா ஒன்றில் கல்லூரி பேராசிரியரின் - "அழகு என்பது என்ன" என்ற கேள்விக்கு - மனதிற்கு சந்தோசம் தருவது அழகு என்று கதாநாயகன் சொல்வார். அழகாக இருப்பது மனதிற்கு சந்தோசம் தருவது மட்டுமில்லாமல், சந்தோசம் தருவது எல்லாம் அழகாகவே தெரிவதை மெல்ல உணர்ந்து கொண்டேன்.
ஒரு முறை அழகான முகம் எப்படி இருக்க வேண்டும் என்று அறிவியல் ரீதியாக வரையறுக்க முயற்சி செய்து பின் விஞ்ஞானிகள் கை விட்டதாக படித்திருக்கிறேன். இதம் தரும் அழகு என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட அனுபவமாகவே இருப்பதால் பொதுவான ஒரு தியரியை எப்படி உருவாக்கிவிட முடியும்.
"Beauty is in the eyes of the behlolder" - என்ற ஆங்கில மரபு தொடர் சொல்வதுபோல பார்பவரிடம்தான் அழகு ஒளிந்திருக்கிறது. அது சமயங்களில் வெளிப்பட்டு வாழ்க்கையை அழகாக்கி விடுகிறது.
பூக்களில் ரோஜாவை மட்டுமே மிகவும் அழகு என்பதுபோல் அளவுக்கு அதிகமாக கொண்டாடுவது மற்ற பூக்களை அவமானபடுத்துவதகவே எனக்கு படுகிறது.
ஒரு பூவின் அழகுக்காக பாடுபடும் செடியின் மற்ற பகுதிகள் தவரவிடப்படுகிறது என்பதி மறுக்க முடியாது.
"Root is a flower that disdains fame" - Kalil Gibran
"வேர் என்பதும் மலர்தான் - அவை புகழை விரும்பாதவை' - என்ற்யு கலீல் கிப்ரான் சொல்லியதும் நினைவில் கொள்ள வேண்டி இருக்கிறது.
அனுபவம் மற்றும் வயது அதிகம் ஆகும் போது அழகு என்பதை அதன் பண்பு மற்றும் குணத்துடன் இணைத்துதான் பார்க்க முடிகிறது. அழகான ஒரு நபர் மோசமான குணம் கொண்டு இருந்தால் அவர் அழகை ரசிக்க முடிவதில்லை என்பதை பலர் உணர்ந்திருக்ககூடும்.
அழகானவை தேர்ந்தெடுக்கப்படும் போது அழகற்றவை என்று கருதப்படுபவையின் மனநிலை என்ன.
அழகாக இருப்பதற்காக அழகான ஒன்று என்ன செய்திருக்க முடியும்
அழகற்றதாக இருக்கும் ஒன்று அதற்காக என்ன தவறு செய்திருக்க முடியும். யோசிக்க வேண்டியுள்ளது.
அழகானது என்று நினைப்பதில் எப்போதாவது அழகற்றது வெளிப்படுகிறது.
அசிங்கமானது என்று முத்திரைகுத்தப்படதின் அழகு எப்போதாவது வெளிப்பட்டு ஆச்சிரியமளிக்கிறது.
அழகானவற்றின் மீதான ஆர்வம் வாழ்க்கை முல்லுவதும் குறைவதில்லை என்பதை உணர்ந்திருக்கிறேன். சமயங்களில் முகவும் அழகாக தோன்றுவதை உடமைபடுத்த எழும் ஆவேசத்தையும் அளக்கி ஆள வேண்டி இருக்கிறது.
பெட்ரோல் வாசம் சிலருக்கு பிடிப்பதை அறிந்த போது இந்த மனதின் எண்ணற்ற சாத்தியங்களின் மேல் வியப்பும் ரசனையின் விதவிதமான படிமங்களை தெரிந்துகொள்ள ஆர்வம் ஏற்பட்டது.
அழகாக தெரிவது பார்க்கும்போது மட்டும் இல்லாமல் அதை நினைக்கும்போதும் இனிமையாகவே தெரிகிறது. நாம் அழகாக உணர்ந்தவைகளை எண்ணி அழகாக இருக்க முயல்வோம்.
நண்பரின் கவிதை ஒன்று :
மலர்களற்ற செடியில்
அழகாக -
இலைகள்.

அழகு பற்றிய ஆராய்ச்சி அழகாக உள்ளது
ReplyDelete